நவம்பர் முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு.. எந்த விடுமுறையும் கிடையாது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நவம்பர் முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு.. எந்த விடுமுறையும் கிடையாது

நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், எந்த விடுமுறையும் கிடையாது என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மார்ச் 25ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் தேர்வு நடத்த முடியாமல் போனது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் முதல், 2ம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஏப்ரலில் கல்லூரிகள் திறப்பது மற்றும் தேர்வுகள் நடத்துவது குறித்து மத்திய அரசின் கல்வித்துறை, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகம் ஆகியவை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தன. இருப்பினும் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராததால், மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தற்போது கல்லூரிகளை திறப்பதற்கான அறிவிப்பை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இதன் தொடர்–்ச்சியாக பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான வகுப்புகள் நவம்பர் மாதமே தொடங்க வேண்டும். அதற்கேற்ப, அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கையை அக்டோபருக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லூரிகளுக்கு பல்வேறு விதிமுறைகளையும் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

* நவம்பரில் கல்லூரிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. புதியதாக சேருபவர்களுக்கு ஆன்லைன் கல்லூரி வகுப்புகள் ெதாடங்கப்படும்.
* நவம்பரில் வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அவர்களுக்கான கல்வி ஆண்டு 2021 ஆகஸ்ட் 30 வரை நடக்கும்.
* கொரோனா தொற்றுக்காக விடப்பட்ட விடுமுறைகளை சரிகட்டும் வகையில், இந்த கல்வியாண்டில் வாரத்துக்கு 6 நாட்கள் கல்லூரி வகுப்பு நடக்கும்.
* அதனடிப்படையில், குளிர்கால மற்றும் கோடை கால விடுமுறைகள் ஏதும் விடாமல் தொடர்ந்து பாடங்களை நடத்த வேண்டும்.
* அதேபோல அனைத்து பல்கலைக்கழகங்களும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். அவர்களுக்கும் எந்த விடுமுறையும் கிடையாது.

No comments:

Post a Comment