பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் 635 பேர் நியமனம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் 635 பேர் நியமனம்


பள்ளி கல்வியில் இளநிலை உதவியாளர் பணிக்கு, 635 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக பள்ளி கல்வியின், பல்வேறு மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் வழியே, புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு, பள்ளி கல்வித் துறை சார்பில், இரண்டு நாட்கள் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தி, பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வழியே, காலி இடங்கள், ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டு, விருப்பமான இடங்கள் ஒதுக்கப்பட்டன.இடங்கள் ஒதுக்கப்பட்ட சிலருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., இன்று பணி நியமன உத்தரவை வழங்க உள்ளார். மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உத்தரவு வழங்கப்படும். புதிய பணியாளர்கள், வரும், 21ம் தேதி பணியில் சேர, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment