ராகு கேது பெயர்ச்சி 2020- முதல் ராசியான மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ராகு கேது பெயர்ச்சி 2020- முதல் ராசியான மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்


முதல் ராசியான மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பதைப் பார்ப்போம். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள், உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள், ஒருவருக்கொருவர் தர்மசங்கடப்பட்டுக்கொள்ளும் நிலை, சொத்துகளில் இருந்த சிக்கல்கள், பிரச்னைகள் எல்லாம் விலகப்போகிற காலகட்டம் இது. வாழ்க்கையிலும் சரி வியாபாரத்திலும் சரி பங்குதாரர்களிடைய இருந்த சிக்கல்கள் தீர்ந்து ‘போனதுபோகட்டும்’ என்று விட்டுவிட்டு ‘நடப்பவை நல்லதாக இருக்கும்’ என்று தீர்மானித்துச் செயல்படும் காலகட்டம்.
இதுவரை துன்பப்பட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு தற்போது நிலைமை மாறி தலைமைப் பதவியும் பண்பும் அதிகாரமும் இந்தப் பெயர்ச்சியினால் ஏற்படும். தங்கம் சேரக்கூடிய காலகட்டம் இது. மேஷ ராசிக்காரர்கள் செய்யக்கூடாதது தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது, யாரையும் தூக்கி எறிந்து பேசுவது ஆகியவற்றைக் கைவிடுவதன் மூலம் மேலும் நல்ல பலன்களைப் பெறலாம்.

No comments:

Post a comment