தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/08/2020

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

புதுடில்லி: தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் டில்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459