நர்சிங் தெரபி பட்டயப் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நர்சிங் தெரபி பட்டயப் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்


அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டு கால அளவுள்ள மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்பு பயில அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மற்றும் அறிவித்துள்ளது.
இதுகுறித்த மற்றும் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
“சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டு கால அளவுள்ள மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்பு பயில அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. * விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விருப்பப்படிவதுடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 24-08-2020 முதல் 18-09-2020 முடிய மாலை 05.00 மணி வரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமான “www. tnhealth.tn.gov.in’’ லிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்கள் இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலிருந்தோ அல்லது பள்ளிகளிலிருந்தோ வழங்கப்பட மாட்டாது.
*. விண்ணப்பக் கட்டணம் .
விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்ப படிவம் : ரூ. 350/-
பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்தை தபால்/ கூரியர் சேவை மூலமாகவோ நேரிலோ சம்ர்ப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணமான ரூ.350/- ஐ நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஆகஸ்டு 24 / 2020 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பெறப்பட்ட கோடிட்ட கேட்பு வரைவோலை ( Demand Draf) இணைத்து அனுப்ப வேண்டும்.
அக்கேட்பு வரைவோலை சென்னையில் பணமாக்கக்கூடியதாகவும், “”””இயக்குநர், மற்றும் ஓமியோபதி, சென்னை 106″” (“Director of Indian Medicine and Homoeopathy, Chennai-106”) என்ற பணியிடப்பெயரில் இருத்தல் வேண்டும்.
* . தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் இனம் / பட்டியல் இனம் (அருந்ததியினர்) / பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்திற்கான தொகை ரூ.350/-யை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.
*. விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்ப படிவங்கள் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள். செப்டம்பர் 18 /2020 மாலை 05.00 மணி வரை .
*. பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவததுடன் கூடிய விண்ணப்பத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு செப்டம்பர் 21/2020 மாலை 5.30 மணிக்குள் தபால்அல்லது கூரியர் மூலமாக வந்து சேரவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ வேண்டும். அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலதாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
செயலாளர், தேர்வுக்குழு,
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,
அரும்பாக்கம், சென்னை- 600 106.
*. அஞ்சல்துறை மற்றும் கூரியர் நிறுவனத்தில் கடைசி நாளுக்கு முன் தேதியில் பதிவு செய்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் வந்து சேரும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது குறித்து எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப்பட மாட்டாது.
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களை கீழ்க்கண்ட இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கட்டணத் தொகையினை பத்தி 3ல் குறிப்பிட்டுள்ளவாறு பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.
இணையதள முகவரி : http/www.tnhealth.tn.gov.in.
இயக்குநர்,
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை,
சென்னை’.
என்கிற முகவரிக்கு அனுப்பவும்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment