இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் தயார்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் தயார்!


இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அனைத்தும் ஏற்பாடுகளும் தயார் அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆன்லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் அதன் வளாக கல்லூரிகள், அதன் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு கொரோனோ காரணமாக இறுதியாண்டு தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

ஆன்லைன் தேர்வினை நடத்த மென்பொருள் வடிவமைப்பிற்கு டெண்டரும் அண்ணா பல்கலைக்கழகம் கோரி அந்த பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனோ பரவல் அதிகம் உள்ள சூழலில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை நடத்த தடையில்லை என தீர்பளித்துள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த தயாராக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a comment