அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக்கல்வி பாடப்பிரிவுகள் அனைத்தும் இணையதளத்தின் வழியாக நடத்தப்படும். - துணைவேந்தர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக்கல்வி பாடப்பிரிவுகள் அனைத்தும் இணையதளத்தின் வழியாக நடத்தப்படும். - துணைவேந்தர்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் தொலைத்தூரக்கல்வி இயக்கக வளாகத்தில் விண்னப்பம் விநியோகத்தை தொடங்கி வைத்தார்

சிதம்பரம், ஆக.5: தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி 2020-21 கல்வி ஆண்டில் கரோனா தொற்று காரணத்தினால் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் நடத்தப்பட்டு வரும் பாடப்பிரிவுகள் அனைத்தும் இணையதளத்தின் வழியாக நடத்தப்படும் என துணைவேந்தர் வே.முருகேசன் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைத்தூரக்கல்வி இயக்கக படிப்புகளூக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது.  பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் தொலைத்தூரக்கல்வி இயக்கக வளாகத்தில் விண்னப்பம் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இரா.ஞானதேவன், தொலைத்தூரக்கல்வி இயக்கக இயக்குநர் பேராசிரியர் ஏ.ராஜசேகரன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் வி.செல்வநாராயனன், புலமுதல்வர்கள், இணைதேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலக மேலாளர் காளிதாஸ் மற்றும் துறைத்தலைவர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள், ஆசிரியர்-ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் துணைவேந்தர் வே.முருகேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தொலைதூரக் கல்வி இயக்கக வாயிலாக இக்கல்வியாண்டில் 2020-21ல் 242 பாடப்பிரிவுகள் நடத்தப்பட உள்ளது. (முதுநிலை பட்டப்படிப்பு – 65, இளநிலை பட்டப்படிப்பு – 66, முதுநிலை பட்டயப்படிப்பு – 52, பட்டயப்படிப்பு – 36, மற்றும் சான்றிதழ் படிப்புகள் – 23).
மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவால் (UGC) அறிவிக்கப்பட்ட தகவலின் படி ரியல் எஸ்டேட் வேலியூவேஷன் மற்றும் ஹெல்த் சயன்ஸ் புரோகிராம்கள் ஆகியவற்றி 5 பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
கல்வியாண்டு 2021-22 முதல் பருவத்தேர்வு முறை தொடங்கப்பட்டு அனைத்து முதுநிலை மற்றும் இளநிலை பாடப்பிரிவுகள் நடத்தப்படும்.  இக்கல்வியாண்டு 2020-21 முதல் மூன்று புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது.
புதிய படிப்புகள்:  பெண் கல்வி முதுநிலை பட்டய படிப்பு ( P.G. Diploma in Women Studies), பிஜி டிப்ளமா இன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (P.G. Diploma in Digital Marketing), சான்றிதழ் படிப்பு தொழில் முனைவோரை கண்டு பிடித்தல் மற்றும் தொழில் மையம் (Certificate in Entrepreneurship Innovation and Career Hub (Commerce Wing).
தொலைதூரக்கல்வி இயக்கத்தில் 2018-19 கல்வி ஆண்டில் மாணவர்களின் அனுமதி சேர்க்கையின் எண்ணிக்கை 98,839, 2019-20 கல்வி ஆண்டில் மாணவர்களின் அனுமதி சேர்க்கையின் எண்ணிக்கை 81,291 ஆக உள்ளது. இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையின் இலக்கு 1,10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அவர்களின் படிப்பு (UG, PG. PG Diploma, Diploma and Certificate) கல்வியாண்டு நிறைவடைந்த பின்  (N+3) மூன்று வருடங்களுக்குள் அவர்களது Theory and Project முடித்து விட வேண்டும். இல்லையெனில், அவர்களது பதிவு எண் தானாகவே நீக்கப்பட்டுவிடும். அதன் பிறகு மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர வேண்டும் என்றால் புதியதாக சேர்ந்து பயில வேண்டும்.
இந்த கல்வியாண்டு முதல் கட்டணங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 04144 – 238043 to 238047, 238610
மின்னஞ்சல் முகவரி: auddegrievance@gmail.com, scgrcdde@gmail.com விண்ணப்ப விற்பனை கடைசி நாள் 30-8-2020 ஆகும். மேலும் பல்கலைக்கழக நேரடி படிப்புகள் ஆக. 3-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது என துணைவேந்தர் வே.முருகேசன் தெரிவித்தார்.

No comments:

Post a comment