மாணவர்களைத் தேடிச்சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மாணவர்களைத் தேடிச்சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்


பெ.நா.பாளையம்;நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு சென்று, ஆசிரியர்கள், கல்வி கற்றுத் தருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலை மாணவர்களுக்கு கடந்த, 17ம் தேதி நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இதைக்கொண்டு ‘ஆன்லைன்’ வாயிலாக வகுப்புகள் தொடங்கி, நடந்து வருகின்றன. ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியர் பலரிடம் ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்க, ‘ஆண்ட்ராய்ட்’ மொபைல் போன் இல்லை. இதனால், அவர்கள் பாடங்களை கற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கல்பனா, ஆசிரியை மேரி ஆகியோர் ஏழை மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு, நேரடியாக சென்று, அவர்களுக்கு கல்வி கற்று தரும் பணியை, மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் கல்பனா கூறுகையில்,”இங்குள்ள பாலவிநாயகா நகரில் வசிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வி கற்று தருகிறோம். பெற்றோரிடம் நிலைமையை எடுத்துக்கூறி, மாணவர்களை இங்குள்ள மரத்தடியில் பாதுகாப்பாக அமரவைத்து, முகக்கவசங்களை அணிவித்து, தகுந்த சமூக இடைவெளியுடன் பாடங்களை கற்று தருகிறோம். இப்பணியை தொடர்ந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்,” என்றார்

No comments:

Post a comment