அரசு பள்ளி மாணவர்களிடம் ஒருபைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது. - ஆசிரியர் மலர்

Latest

30/08/2020

அரசு பள்ளி மாணவர்களிடம் ஒருபைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது.

சென்னை, 
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்து வரும்நிலையில், மாணவர்களிடம் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.
அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களிடம் இருந்து நன்கொடை வசூலிப்பதாக சில பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும் நிலையில், அதற்காக நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூல்செய்யப்படுவது தவறு. கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவரும் பெற்றோரிடம் கட்டணம் செலுத்தும்படி கூறி சிரமப்படுத்தக்கூடாது. 
அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் குழந்தைகளை சேர்க்கவரும் பெற்றோரிடம் ஒருபைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது. பெற்றோரிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும் என்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கவேண்டும். கல்வித்தரத்தை மேம்படுத்தியும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்தும் அரசு பள்ளிகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் பாடுபடவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459