என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், ஐடிஐ படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அறிய வாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், ஐடிஐ படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அறிய வாய்ப்புஎன்.எல்.சி இந்தியா நிறுவனம்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், தொழில் பழகுநர் சட்டம்-1961, இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Fitter fresher – 20
2. Electrician fresher – 20
பயிற்சி காலம்: 2 ஆண்டு
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு முதல் மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.
தகுதி: 2018, 2019 மற்றும் 2020 ஆண் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Welder fresher – 20
4. Medical Lab Technician Pathology – 10
5. Medical Lab Technician Radiology – 05
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு முதல் மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.
தகுதி: அறிவியல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.06.2020 தேதியின் படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பத்திதனை பிரிண்ட் அவுட் எடுத்து கையொப்பமிட்டு அதனுடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கோ அல்லது அலுவலகத்தில் உள்ள பெறுதல் பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
துணை பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம் – 20, நெய்வேலி – 607803.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுபவர்கள் பட்டியல் உத்தேசமாக 24.09.2020-இல் இணையதளத்தில் வெளியிடப்படும் .
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

No comments:

Post a comment