கொத்தானார் வேலை பார்க்கும் பிஎச்டி ஆராய்ச்சியாளர் - ஆசிரியர் மலர்

Latest

03/08/2020

கொத்தானார் வேலை பார்க்கும் பிஎச்டி ஆராய்ச்சியாளர்


தெலுஙகானாவில் பி.எச்.டி முடித்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனாவால் வேலை கிடைக்காததால் கொத்தனார் வேலை பார்க்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முலுகு மாவட்டம் வெங்கடபூர் கிராமத்தில் வசிக்கும் 31 வயதான நரேஷ் என்ற இளைஞர் வாரங்கலில் உள்ள ககாதியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 கடந்த மார்ச் வரை எம்.பில், பி.எச்.டி முடித்தார். பின்பு அங்கேயே பகுதிநேர விரிவுரையாளராக முயற்சிக்கும்போது, கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் வறுமை வாட்டவே, எந்த வேலையும் அவமானமில்லை என்று நினைத்து கொத்தனார் வேலையைப் பார்த்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசும்போது,
”நான் வரலாற்றில் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளேன். வறுமையான சூழலில்தான் இந்நிலையை கடினமாகப் படித்து அடைய முடிந்தது. எனது அப்பாவும் ஒரு கொத்தனார்தான். அதனால், இந்தவேலை எனக்கு கஷ்டமாக இல்லை. நேர்மையாக உழைத்து வாழ்வதில் தவறில்லை.” என்று தன்னம்பிக்கையோடு பேசும் நரேஷ் கொத்தனார் வேலைக்குச் சென்றுகொண்டே தேசியத் தகுதித் தேர்வான ’நெட்’க்கும் தயாரிக்கொண்டு வருகிறார். மேலும், இவர் யூ.ஜி.சியின் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளில் நான்கு ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459