எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்


“எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” என யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார் தெரிவித்தார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யூபிஎஸ்சி) 2019-ம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான முடிவு வெளியானது. இதில் அகில இந்திய அளவில் தமிழக இளைஞர் கணேஷ்குமார் பாஸ்கர் (27) 7-வது இடம் பிடித்துள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகரைச் சேர்ந்தவர். கணேஷ்குமார் பாஸ்கர் ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம் கூறுகையில், ”எனது தந்தை பாஸ்கர் மத்திய அரசு ஊழியர். தாயார் லீலாவதி குடும்பத் தலைவி. தங்கை கிருத்திகா கோவையில் பொறியியல் படித்து வருகிறார்.
எனது தந்தை பணியாற்றிய இடங்களில் எல்லாம் குடும்பத்துடன் இருந்ததால் சிறு வயதில் இருந்தே வெவ்வேறு மாநிலங்களில் படித்துள்ளேன். மத்திய பாடத்திட்டத்திலேயே பிளஸ் 2 வரை படித்தேன்.
10-ம் வகுப்பை ஹரியாணாவிலும், 12-ம் வகுப்பை மதுரை கேந்திர வித்யாலயாவில் படித்தேன். பி.டெக் படிப்பை கான்பூரிலும், எம்.பி.ஏ. படிப்பை அகமதாபாத்திலும் முடித்துள்ளேன்.
யூபிஎஸ்சி தேர்வுக்காக பிரத்யேகப் வகுப்பிற்கு எதுவும் செல்லவில்லை. வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்பைப் பின்பற்றி மட்டுமே படித்தேன்.
2 மாதத்திற்கு முன்பே தேர்விற்குத் தயாரானேன். எவ்வளவுதான் எடுத்திருந்தாலும் நேரத்தில், அதாவது தேர்விற்கு சில தினங்களுக்கு முன்பிருந்து திட்டமிட்டுப் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்.
இதற்கு முன்பும் ஒரு முறை யூபிஎஸ்சிக்கு கடினமாகப் படித்து முயற்சி செய்தேன். இது 2-வது முறை. எனவே தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சி செய்பவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறலாம்” என்றார்.

No comments:

Post a comment