திடீரென புதிய உச்சம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா.. மொத்தமாக 415590 பேர் பாதிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

திடீரென புதிய உச்சம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா.. மொத்தமாக 415590 பேர் பாதிப்பு


சென்னை: 6352 பேர் இன்று தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 4,15,590 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கடந்த 15 நாட்களாக தினமும் 5500க்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக தினசரி கேஸ்கள் 6 ஆயிரத்தை நெருங்கியது. இந்த நிலையில் இன்று 6 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வந்துள்ளது. இன்று கொரோனா சோதனைகள் அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில் கேஸ்களும் அதிகம் வந்துள்ளது .கொரோனா வந்தால் ஜூரம், மூச்சு பிரச்சினை, இருமல் மட்டும் அறிகுறி அல்ல.. இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு!சோதனை எத்தனைஇதுவரை இல்லாத அளவிற்கு இன்று தமிழகத்தில் கொரோனா சோதனை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் கொரோனா சோதனை விவரம், இன்று 80988 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 4654797 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 78973 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4499670 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.டிஸ்சார்ஜ் எப்படிஆனால் இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6045 பேர் இன்று தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,55,727 பேர் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 52726 ஆக உயர்ந்துள்ளது.சென்னை எப்படிசென்னையில் இன்று 1285 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் 133173 பேர் சென்னையில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 87 பேர் இன்று கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 7137 பேர் பலியாகி உள்ளனர்.மற்ற மாவட்டங்கள்இன்று செங்கல்பட்டில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 25366 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கடலூர் 420 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 10755 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 491 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14393 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a comment