6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவா ?நிதித்துறை விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

19/08/2020

6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவா ?நிதித்துறை விளக்கம்


கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூர்த்தி அனைத்து மாவட்ட இணை இயக்குனர்கள் மற்றும் கருவூல அலுவலர்களுக்கு சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது, வங்கி கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணம் பரிவர்த்தனை நடைபெறாவிட்டால் அதுகுறித்த, தகவல்களை சம்பந்தப்பட்ட வங்கியானது கருவூலத்துறை தெரிவிக்கவேண்டும்.

மேலும், ஓய்வு ஊதியம் சான்றிதழை சமர்ப்பிக்க விட்டாலோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்யாவிட்டாலும் ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் பரிவர்த்தனை திரும்ப பெற வேண்டும்.
சேமிப்பு உள்ளிட்ட இதர அம்சங்கள் தவிர்த்து ஓய்வூதிய தொகையை மட்டுமே திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை என்றும் 6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பணப்பரிவர்த்தனை செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459