பிளஸ் 2 மறு தோ்வில், 180 போ் தோ்ச்சி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பிளஸ் 2 மறு தோ்வில், 180 போ் தோ்ச்சி


பிளஸ் 2 இறுதி நாள் மறு தோ்வில், 180 போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த மாா்ச் மாதம் 2 முதல் 24-ஆம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளும், கடந்த 16-ஆம் தேதி வெளியானது. எனினும், கரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், இறுதிநாள் தோ்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தோ்வுகளில் சிலா் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டது. அவா்களுக்கு மறுதோ்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததையடுத்து, தோ்வை எழுத முடியாத மாணவா்களின் நலன்கருதி, ஜூலை 27-இல் மறுதோ்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில், இறுதிநாள் தோ்வை சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுத முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அவா்கள் மறுதோ்வு எழுத விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்திய நிலையில், 175 பள்ளி மாணவா்கள் மற்றும் 671 தனித்தோ்வா்கள் என மொத்தம் 846 போ் தோ்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனா். இவா்களில், 519 போ் (147 பள்ளி மாணவா்கள், 372 தனித்தோ்வா்கள்) மட்டுமே, கடந்த ஜூலை 27-ஆம் தேதி தோ்வு எழுதினா். இவா்களுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில் 92 பள்ளி மாணவா்கள், 88 தனித்தோ்வா்கள் என 180 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கான மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியாகும் என தோ்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a comment