ஆசிரியர்களுக்கு கட்டாய கொரோன பரிசோதனை; செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர்களுக்கு கட்டாய கொரோன பரிசோதனை; செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு

புதுடெல்லி:

அசாம் அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, நாளை மறுநாள் முதல் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்ததும் கொரோனா நோய்தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். கொரோனா கட்டாய பரிசோதனை ஆகஸ்ட் 21 முதல் தொடங்கும் என்றார். 

மேலும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் செப்டம்பர் 1 க்குள் தங்கள் பணியில் சேர வேண்டும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருப்போம், மேலும் 24 மணி நேரத்திற்குள் நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி -  SOP) வெளியிடுவோம்" என்று சர்மா கூறி உள்ளார்.

ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்ற ஊழியர்கள், உடனடியாக திரும்பி பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு வரும் வரை, பணிபுரியும் ஊரில் காத்திருப்புடன் இருக்க வேண்டும். ஒருவேளை பணிக்கு வரவில்லையெனில், அது ஊதியம் இல்லாதா விடுப்பு என்று கருதப்படும் என கூறி உள்ளார்.
செப்டம்பர் 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படாது. ஊழியர்கள் மட்டுமே தங்கள் பணிகளை செய்ய கேட்கப்படுவார்கள். மத்திய அரசு உத்தரவு அளித்த பின்னர் தான், மாணவர்கள் வகுப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.

No comments:

Post a comment