GATE - 2021 Exam Date Announcement! - ஆசிரியர் மலர்

Latest

27/07/2020

GATE - 2021 Exam Date Announcement!


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – பம்பாய் (IIT-B) ஆனது பொறியியல் பட்டதாரி திறனுக்கான சோதனை (GATE) 2021 தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தது. GATE 2021 முக்கிய தேதிகளும் தகுதி வரம்புகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே வழங்கி உள்ளோம். தேர்வர்கள் அதன் மூலம் முழு விவரங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

GATE-2021 தேர்வு தேதி:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக GATE-2021 ஆம் ஆண்டிற்கான தேர்வை பிப்ரவரி 5, 6, 7, 12, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகுதிக்கான அளவுகோல்கள் (Eligibility Criteria:

Humanities பாடப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் GATE தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் (Environmental Science & Engineering (ES)) மற்றும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் (Humanities & Social Sciences (XS)) உள்ளிட்ட இரண்டு புதிய பாடப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு புதிய பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், GATE 2021-க்கான மொத்த பாடப் பிரிவுகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

குறைந்தபட்சமாக 10 + 2 + 4 என இருந்த தகுதி அளவுகோல்கள் குறாய்ந்தபட்சம் 10 + 2 + 3 என தளர்த்தப்பட்டுள்ளன. அதாவது மூன்றாம் ஆண்டு மாணவர்களும் இப்போது GATE 2021 க்கு விண்ணப்பிக்கலாம்.

Download GATE 2021 Exam Date

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459