அடுத்தவங்களுக்கு உதவணும்னு நினைக்கிற எல்லோரும் எங்க கட்சிக்கு வரலாம்!''- ஆசிரியை சபரிமாலா - ஆசிரியர் மலர்

Latest

19/07/2020

அடுத்தவங்களுக்கு உதவணும்னு நினைக்கிற எல்லோரும் எங்க கட்சிக்கு வரலாம்!''- ஆசிரியை சபரிமாலா


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர் சபரிமாலா. நீட் தேர்வுக்கு எதிராகவும், இந்தியா முழுவதும் ஒரே கல்விமுறையை வலியுறுத்தியும் தன் மகனுடன் 2017-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். துறை ரீதியாக அழுத்தங்கள் அதிகரிக்க, தன்னுடைய பணியை ராஜினாமா செய்தார். தற்போது ‘பெண்கள் விடுதலைக் கட்சி’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக சபரிமாலாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
“தனி மனுஷியா நிறைய இடங்களில் போராடிட்டேன். ஆனா, எந்தப் பிரச்னைக்கும் முழுமையான தீர்வு காண முடியல. இன்னும் சொல்லணும்னா அந்தப் பிரச்னைக்கான விழிப்புணர்வைக்கூட மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்க முடியல. தெருவில் நின்னு போராடும்போது, எதுக்காகப் போராடுறாங்கனு நின்னுகூட கேட்க நேரம் இல்லாமல் மக்கள் என்னைக் கடந்து போயிருக்காங்க. நாட்டுல என்ன பிரச்னை வந்தாலும், நமக்கு நேரடியா பாதிப்பு இல்லைனு, ஒவ்வொருத்தரும் ஒதுங்குறதாலதான், சமுதாய சீர்கேடுகளை சந்திக்கிறோம்
. ஒரு பிரச்னை வந்ததும், சமூகவலைதளங்களில் அதைப்பத்தி ரெண்டு நாள் ஆவேசமாகப் பேசுறோம். புதுசா இன்னொரு செய்தி வந்ததும், நேற்றைய பிரச்னை நமக்கு மறந்து போயிருது. இந்த அலட்சியமும் மறதியையும் அரசாங்கம் பயன்படுத்திக்குது.

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459