அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அண்ணாமலைப் பல்கலை.யின் நிகழ் கல்வியாண்டுக்கான (2020-2021) மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. 
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டம், ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டம், சான்றிதழ் படிப்புகள், வேலைவாய்ப்பு மிக்க செயல்திறன் படிப்பு (ஆ.யர்ஸ்ரீ) களில் சேரலாம். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்றவை.
இந்தப் படிப்புகளுக்கு மாணவர்கள் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் www.annamalaiuniversity.ac.in  என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலமும், மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை மாநில அரசின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு மூலமும் நடைபெறும். 
விவசாயம், தோட்டக் கலை, செவிலியர், மருந்தாளுநர் படிப்புகளுக்கான கலந்தாய்வு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் (Online) மூலம் நடைபெறும். நிகழாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இணையதளம் வழியாகவே நடைபெறும்.
எனவே, மாணவர்கள் தங்களுடைய அனைத்துச் சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a comment