தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு


கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளிகள் திறக்கப்படாததால், அரசுபள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொலைக்காட்சி மூலமாகத்தான் பாடங்கள் நடத்தப்படும். ஆன்லைன் மூலம் இல்லை. இதை விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a comment