இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு : சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி - ஆசிரியர் மலர்

Latest

07/07/2020

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு : சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

புதுடெல்லி,

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி ஆகியவற்றுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு ரோஸ்டர் முறையில் பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு இந்த முறையை ரத்து செய்து உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.  

இந்த நிலையில், அதற்கு மாற்றாக கடந்த 2016-ல் தமிழக அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் படி மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி வழங்குவதற்கு வழிவகை செய்தது.

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பெருந்துறையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா, சென்னையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அரசின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசின் சட்டம் விதிமுறைகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறை என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,ஞ் தமிழக அரசின் இந்த சட்ட விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459