தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவர் நியமனம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவர் நியமனம்


தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவராக டிஜிபி என்.தமிழ்செல்வன் வெள்ளிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்
. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி சுனில்குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை மாநில மனித உரிமை ஆணையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதனால் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவா் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பணியிடத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபியாக இருந்த என்.தமிழ்செல்வனை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை தமிழ்செல்வன் ஏற்பாா் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment