கட்டாய கல்வி கட்டண வசூலுக்கு தடை கோரும் வழக்கு : உச்ச நீதிமன்றம் விளக்கம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கட்டாய கல்வி கட்டண வசூலுக்கு தடை கோரும் வழக்கு : உச்ச நீதிமன்றம் விளக்கம்

புதுடெல்லி: ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கூடங்கள் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துகின்றோம் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் தொடர்ச்சியாக கல்வி கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், பள்ளி கட்டண வசூலுக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, பள்ளிகளின் கவி கட்டண வசூல் விவாகரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டது. பள்ளிகளில் கல்வி கட்டண வசூல் பிரச்சனை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபாடும் என்பதால் ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பாக மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களை அணுகுமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a comment