வேப்பம் பூ இத்தனை நோய்களை விரட்டுமா.? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

வேப்பம் பூ இத்தனை நோய்களை விரட்டுமா.? வேப்பம் பூவை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கும்..! தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயன் உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே கிராமத்தின் மருந்தகம் என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது . வேப்பமரம் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை உட்பாகம், இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்தும் பகுதிகளும் பயன் தர கூடியது. வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு, அந்த நீரை தினந்தோறும் 
காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கெட்ட கொழுப்பு நீங்கி உடல் பருமன் வெகுவாக குறைவதை காணலாம். வாயுத்தொல்லை ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் ஒருவாரத்தில் நிவாரணம் கிடைக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் காற்று பல வியாதிகளை குணப்படுத்தும். 

No comments:

Post a comment