தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு மருத்துவர் பணியிடங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு மருத்துவர் பணியிடங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு மருத்துவர் பணியிடங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் வெங்குளத்தைச் சேர்ந்த ராஜு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்த காலியிடங்களை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 95 சதவீத பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a comment