பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர அனுமதி - ஆசிரியர் மலர்

Latest

13/07/2020

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தர அனுமதி


பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1997 முதல், 2000ம் ஆண்டு வரையிலான, பின்னடைவு காலியிடங்களில், உயர்கல்வி தகுதியுள்ளவர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டது.அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.எட்., படித்திருந்தால், அவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது, நிபந்தனைகளுக்கு தளர்த்தப்பட்டு, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க, பள்ளி கல்வி மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459