நியாய விலைக் கடைகளில் பணி : பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நியாய விலைக் கடைகளில் பணி : பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிப்பு


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள, கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில், காலியாக உள்ள 79 விற்பனையாளர் மற்றும் 20 கட்டுநர் பணிகளை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இம்மாதம் 8ம் தேதி வரை திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் பெறப்பட்டன. மேலும், விண்ணப்பதாரர்கள் கட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு, விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த ரேஷன் கடை விற்பனையாளர் பணி மற்றும் கட்டுநர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் காலி பணியிடங்களில் பணி அமர்த்தப்படுவார்கள். இதில், கட்டுநர் பணி என்பது கிழிந்த மூட்டைகளை ஊசி மூலம் தைத்து கட்டும் பணியாகும். 18 வயது பூர்த்தியான பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் இந்தப் பதவிக்குத் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள 29 பணிக்காக 3 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், அரிசி, பருப்பு வகைகளை பில் போடுவதோடு, தராசில் எடைபோட்டு வழங்கும் விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில், பெரும்பாலும் பட்டதாரிகள்.அதுவும், பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவில் விண்ணப்பித்து உள்ளார்கள். இது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a comment