இனி வாய்யா...போய்யா கூடாது.!போலிசாருக்கு அறிவுறுத்திய அதிகாரி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இனி வாய்யா...போய்யா கூடாது.!போலிசாருக்கு அறிவுறுத்திய அதிகாரி

அவிநாசி:சாத்தான்குளம் சம்பவத்தின் தொடர்ச்சியாக, அவிநாசி போலீசாருக்கு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கைது நடவடிக்கைக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் கூடுதல்எஸ்.பி., ஜெயச்சந்திரன், அவிநாசி போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதில், ‘புகார் கொடுக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்தக் கூடாது. ‘போய்யா… வாய்யா!’ என்பது போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.
வழக்குகளை சாதுரிய மாக கையாள வேண்டும்,’ என்பது போன்றஅறிவுரை வழங்கப்பட்டது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில், சமூக இடைவெளி பின்பற்றி நடத்தப்பட்ட கூட்டத்தில், டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

No comments:

Post a comment