தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த, மும்பை மாணவர்களும் ஆல் பாஸ் -முதல்வர் - ஆசிரியர் மலர்

Latest

01/07/2020

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த, மும்பை மாணவர்களும் ஆல் பாஸ் -முதல்வர்


சென்னை : தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த, மும்பை மாணவர்கள், 69 பேர், பத்தாம் வகுப்பு தேர்வில், தேர்ச்சி பெற்றதாக, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை வாழ் தமிழ் மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மும்பையில் நடத்தப்பட்டு வருகிறது
. மும்பையில், தமிழ் வழியில், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த, 69 பள்ளி மாணவர்கள், மும்பையில் உள்ள, பிரைட் உயர்நிலைப் பள்ளி, பாண்டூர் மற்றும் ஸ்டார் ஆங்கில பள்ளி, சீத்தா கேம்ப் ஆகிய, தேர்வு மையங்களில், தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்
.இந்த ஆண்டு, கொரோனா நோய் தொற்றிலிருந்து, பள்ளி மாணவர்களை காக்க, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல, மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த, 69 மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது. அவர்களுக்கான மதிப்பெண்களை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையின்படி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459