தமிழகத்தில் இன்று புதிதாக 6,785 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் இன்று புதிதாக 6,785 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று


கோப்புப்படம்
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,785 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 6,729. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 56 பேர். இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,299 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 92,206 ஆனது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 88 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் பலியானோர் 66 பேர், தனியார் மருத்துவமனையில் பலியானோர் 22 பேர். இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,43,297 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 53,132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 22,23,019 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 58, தனியார் ஆய்வகங்கள் 56 என மொத்தம் 114 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாதிப்பு 6 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment