தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1,17,252 ஆண்கள், 75,689 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 52,939 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583ல் இருந்து 1,36,793 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரேநாளில் 62,112 மாதிரிகளும், இதுவரை 21,57,869 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 63 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மேலும் 1,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 89,542லிருந்து 90,900 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 20வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

No comments:

Post a comment