தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

05/07/2020

தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிதமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம். தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 1,713 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் இன்றைய (ஜூலை 5) தொற்று விவரம் குறித்து வெளியிட்டுள்ள விவரங்கள்:
”தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 34 ஆயிரத்து 831 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று மட்டும் 34 ஆயிரத்து 102 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. மொத்தமாக, 12 லட்சத்து 83 ஆயிரத்து 419 தனிநபர்களுக்குக் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 2,186 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 62 ஆயிரத்து 778 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்றுக்கு இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இன்று உயிரிழந்தவர்களுள் 57 பேருக்கு ஏற்கெனவே இணை நோய்கள் இருந்துள்ளன. 3 பேர் இணை நோய்கள் அல்லாதவர்கள் ஆவர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.
46 ஆயிரத்து 860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,713 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.
அரசு சார்பாக 49 பரிசோதனை மையங்கள் மற்றும் தனியார் சார்பாக 46 பரிசோதனை மையங்கள் என தமிழகத்தில் மொத்தமாக 95 மையங்கள் உள்ளன”
.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment