வாழ்வாதாரம் இழந்த 329 வேதியியல் ஆசிரியர்கள்..! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

வாழ்வாதாரம் இழந்த 329 வேதியியல் ஆசிரியர்கள்..!டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 329 முதுகலை வேதியியல் ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்படாமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் ~ டி.ஆர்.பி., ~ கணினி வழியில், 2019ல் தேர்வு நடத்தியது.

 அக்டோபரில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, நவம்பர், 20ல் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், வேதியியல் பட்டியலில், இடஒதுக்கீட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என, தனி நபர் ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், வேதியியல் தவிர்த்து, பிற, 14 பாடங்களைச் சேர்ந்த, 1503 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தனி நபர் வழக்கால், 329 வேதியியல் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்கவில்லை.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:டி.ஆர்.பி.,யில் வெற்றி பெற்றதால், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி, கடும் பொருளாதார சிக்கல்களுடன், மனவேதனையில் உள்ளோம்.

எங்கள் நலன் கருதி, சட்ட விதிக்கு உட்பட்டு, வழக்கு தொடர்ந்தவரின் பணியிடத்தை மட்டும் நிறுத்தி வைத்து, பிற ஆசிரியர் களுக்கு பணி நியமனம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a comment