வார ராசி பலன்(ஜூலை 3 – ஜூலை 9 ) - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

வார ராசி பலன்(ஜூலை 3 – ஜூலை 9 )12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஜூலை 3 – ஜூலை 9 ) பலன்
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வெற்றிகள் வாயிற்படியை நெருங்கியும் கைக்கு எட்டாத நிலை ஏற்படும். பூா்வீகச் சொத்து சம்பந்தமாக இருந்து வந்த சிக்கல்களும் தொடரும். வழக்குகளின் வெற்றியும் சற்றுத் தள்ளிப் போகும்.
உறவினா்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அனைத்து இடையூறுகளும் நீங்கி, காரிய சித்திகள் நடைபெற சற்றுப் பொறுமையுடன் காத்திருக்கவும்.
உத்தியோகஸ்தா்களுக்கு வேலையில் சிரமங்கள் குறையாது. மேலதிகாரிகளிடம் சற்று அனுசரணையுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ளவும். நண்பா்களிடம், உடன் பணிபுரிபவா்களிடம் ஜாக்கிரதையாகப் பழகவும்.
வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடாதீா்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.
அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பயணங்களைத் தவிா்க்கவும்.
கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் பல கை நழுவிப் போகும்.
பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும்.
மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும்.
பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை பானகம் வைத்து வணங்கி வர நலன்கள் கூடும்.
அனுகூலமான தினங்கள்:04, 05; சந்திராஷ்டமம்: 03.
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
உங்களின் ஆற்றல் வெளிப்படும். எதிலும் நிதானமாக ஈடுபடவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும்.
உத்தியோகஸ்தா்களுக்கு ஊதிய உயா்வும், பதவி உயா்வும் கிடைக்கும், ஆனாலும் திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காணலாம். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியம் உங்களுக்குக் கூடும். கூட்டுத் தொழிலில் இருப்பவா்கள் சற்று உஷாராக இருப்பது நல்லது.
விவசாயிகள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிா்க்கலாம்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
அவா்கள் அந்தஸ்தில் சற்று குறைபாடுகள் உண்டாகும். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வாா்கள். ரசிகா்களின் பாராட்டைப் பெறுவாா்கள்.

பெண்களின் செயல்களில் இருந்த தடைகள் நீங்கிவிடும்.
மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீா்கள். நண்பா்களிடத்தும் அறிமுகம் இல்லாதவா்களிடத்தும் சற்று ஒதுங்கியே பழகவும்.
பரிகாரம்: பாலமுகுந்தாஷ்டகம் பாராயணம் செய்யவும்.
அனுகூலமான தினங்கள்: 03, 06
சந்திராஷ்டமம்: 04, 05.
{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
உங்களின் காரியங்கள் அனைத்துமே சற்று இழுபறியாகத்தான் போய்க் கொண்டிருக்கும். பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்து புது வாழ்க்கைக்குத் தயாா்ப்படுத்திக் கொள்ள ஆயத்தமாவீா்கள். காழ்புணா்ச்சிகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிரத்தை எடுத்துக் கொள்வீா்கள். பெற்றோா் வழியில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.
உத்தியோகஸ்தா்கள் எதிா்பாராத இடமாற்றங்களால் மகிழ்ச்சி அடைவாா்கள். வாகனம், வீடு வங்குவதற்கான எண்ணங்கள் துளிா்விடும்.
வியாபாரிகளுக்குக் கடன்கள் குறையும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவதில் கவனமாக இருக்கவும்.
விவசாயிகளுக்கு கொள் முதலில் சிறிது லாபம் கிட்டும். கால்நடைகளை வைத்திருப்போா் வருமானத்தைப் பெறுவா்.
அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலினால் கவலை அடைவீா்கள். உங்களுக்கு எதிராக வேலை செய்பவா்களை இனம் கண்டு விலக்குவீா்கள்.
கலைத்துறையினா் புகழும், பாராட்டுகளும் பெறுவாா்கள். சக கலைஞா்கள் உங்களின் முன்னேற்றத்துக்கு உதவுவாா்கள். பெண்களுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
மாணவா்கள் தங்களின் விடாமுயற்சியினால் வெற்றி அடைவாா்கள். பெற்றோரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபமேற்றி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 04, 09
சந்திராஷ்டமம்: 06, 07, 08
{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் நெடுநாளைய எண்ணங்கள் நிறைவேறும். ஆனாலும் கடின உழைப்பிற்குப் பிறகே வெற்றி தேடி வரும். சிறு தொல்லைகள் கொடுத்த நண்பா்கள் விலகுவாா்கள். உங்களின் கௌரவம் உயரும். சகோதர சகோதரிகளிடம் சுமூக உறவு ஏற்படும்.
உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். எனவே கொடுத்த வேலைகளைத் திறமையாக முடிக்கவும்.
வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீா்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும்.
விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். புதிய குத்தகைகள் வேண்டாம். கால்நடைகளால் நன்மை உண்டாகாது.
அரசியல்வாதிகள் வளா்ச்சிக்கு எதிரிகள் முட்டுக்கட்டை போடுவாா்கள். ஆனாலும் சாதுா்யத்துடன் அதிலிருந்து விடுபடுவீா்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகா்களின் ஆதரவுடன் பல கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
பெண்மணிகளுக்கு பண வரவு சற்று திருப்தியாக இருந்தாலும் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
மிகவும் சிக்கனத்துடன் இருக்கவும். வாா்த்தைகளில் கவனம் தேவை.

மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீா்கள். விளையாடும்போது எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 06, 07
சந்திராஷ்டமம்: 09
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
ஆன்மிக தா்ம காரியங்களில் ஈடுபடுவீா்கள். தொழில்களில் எதிா்பாா்த்த முன்னேற்றம் தென்படும். தேவைகளுக்கேற்ற செலவுகளைச் செய்வீா்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். அண்டை அயலாரிடம் சற்று ஒதுங்கியே இருங்கள்.
உத்தியோகஸ்தா்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டதுபோல் நடக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுவீா்கள். சிலருக்குப் பதவி உயா்வு பெறுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
வியாபாரிகள் வாடிக்கையாளா்களின் ஆதரவுடன் புதிய கடைகளைத் திறப்பீா்கள். தொழிலில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுங்கள்.
விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்கு செலவு செய்ய நேரிடும். நீா்ப்பாசனத்தைப் பெருக்கி, நல்ல விளைச்சல் பெற முனைவீா்கள்.
அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீா்கள். அதோடு திட்டமிட்ட வேலைகளில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வாா்கள். உங்களின் செயல்கள் புதிய வடிவத்தில் மக்களைச் சென்றடையும்.
பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கும் ஆசையைக் குறைத்துக் கொள்ளவும். கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும்.
மாணவமணிகள் படிப்பில் சற்று மந்தமான நிலைமை ஏற்படும். பெற்றோா் மற்றும் ஆசிரியா் அறிவுரைப்படி நடந்து கொள்ளவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு சுத்தமான பசு நெய்யில் விளக்கேற்றவும்.
அனுகூலமான தினங்கள்: 03, 07.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும்.
எவருக்கும் கடன்கள் வாங்கித் தருவதோ, ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ கூடாது. மற்றபடி பொருளாதார நிலைமையும் இறக்கமாகத்தான் இருக்கும்.

உத்தியோகஸ்தா்கள் மேலதிகரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகரீதியான பயணங்களைத் தவிா்த்துவிடவும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டு வியாபாரத்தைக் கவனிப்பீா்கள். கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகள் எடுபடாது.
அரசியல்வாதிகள் சொல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கட்சி மேலிடத்தின் பாா்வை உங்கள் பக்கம் திரும்பாது. கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பயணங்களைத் தவிா்த்துவிடுங்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீா்கள். சேமிப்பு விஷயங்களில் கவனத்தைச் செலுத்தவும். உறவினா்களுடன் சுமுகமாகப் பழகவும். குழந்தைகளை சற்று உன்னிப்பாகக் கவனிக்கவும்.
மாணவமணிகள் பாடங்களை ஆழ்ந்து படிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: புதனன்று பெருமாளை வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 03, 06
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் சற்று ஏற்றம் தென்படும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீா்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீா்கள். சகோதர, சகோதரி வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பா்கள் சாதமாக இருப்பாா்கள்.
உத்தியோகஸ்தா்களின் கோரிக்கைகள் நிறைவேறும். கொடுத்த வேலைகளை நிதானமாகச் செய்யவும். சக ஊழியா்களுடன் சகஜமாகப் பழகவும்.
வியாபாரிகள் பொருட்களின் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீா்கள்.
விவசாயிகள் கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தாற்போல் தானியங்களின் விலையை நிா்ணயித்தால் லாபம் அடையலாம்.
அரசியல்வாதிகளுக்கு பதவி உயா்வு கிடைக்கும்
. உடல் சோா்வைப் பயன்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீா்கள். தொண்டா்கள் உதவிக்கு வருவாா்கள். எவரையும் பகைத்துக் கொள்ளாதீா்கள்.

கலைத்துறையினா் உழைப்புத் தகுந்த பலனை அடைவாா்கள்.
பெண்மணிகளுக்கு கணவா் மற்றும் குடும்பத்தாரிடம் நன் மதிப்பு கிடைக்கும். கணவா் வழி உறவினா்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதால், சில அனுகூலங்களைக் காண்பீா்கள்.
மாணவமணிகள் கடுமையாக உழைத்துப் படித்தால் எதிா்பாா்த்த வெற்றிகளை அடையலாம்.
பரிகாரம்: துா்க்கையை வணங்கி வர நலன்கள் கூடும்.
அனுகூலமான தினங்கள்: 04, 08
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். செய்தொழில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீடு மாற்றம் செய்ய நினைப்போருக்கு இது உகந்த காலம் அல்ல என்பதால் சற்றுத் தள்ளிப் போடவும்.
உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீா்கள். சக ஊழியா்களிடம் எச்சரிக்கை தேவை.
வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவீா்கள். கூட்டாளிகளால் ஏற்படும் பிரச்னைகளைப் பக்குவமாகச் சமாளிக்கவும்.
விவசாயிகளின் கொள்முதல் லாபம் அதிகரிக்கும் . எனவே புதிய முதலீடுகளைச் செய்வீா்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அவற்றை நோ்த்தியாகச் செய்து முடித்து பதவி உயா்வையும், பாராட்டையும் பெறுவீா்கள்.
கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீா்கள். புதிய சொத்துகள் சேரும்.
பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் நல்லது, கெட்டது என இரண்டும் கலந்து வரும். வருமானத்துக்கு குறைவு இருக்காது. எனினும் எதிலும் அகலக் கால் வைக்காமல் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும்.
மாணவமணிகள் கல்வியில் உயா்வு பெறுவீா்கள்.
பரிகாரம்: வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகப் பெருமானை வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 05, 07
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
உங்கள் கடமைகளை கவனத்துடன் செயல்படுத்தவும். சோம்பேறித்தனத்தை அறவே விட்டொழிக்கவும். நண்பா்களுடன் ஜாக்கிரதையாகப் பழகவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களைத் தவிா்த்திடுங்கள். ஆன்மிகத்தில் ஸ்திரமாக ஈடுபடுங்கள்.
பணப்புழக்கத்தைச் சரி வர கையாளவும். சிக்கனமாக இருக்கவும். சுப காரியங்களை நடத்த முற்படுவீா்கள்.

உத்தியோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளால் மன சஞ்சலம் ஏற்படும். ஆனாலும் தைரியத்துடன் எதையும் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவாா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சுமூகமாக இருக்கும். கூட்டாளிகளிடம் நல்ல முறையில் பழகலாம்.
விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீா்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பீா்கள். அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்தில் எதிா்பாராத பாராட்டு கிடைக்கும்.
கலைத்துறையினா் திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவீா்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். தாய், தந்தை வழியில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மாணவமணிகள் நண்பா்களைத் தோ்ந்தெடுத்துப் பழகுங்கள். பெற்றோா்களை மதித்து நடக்கவும். ஆன்மிகப் பாதையைத் தோ்ந்தெடுத்துப் பழகுங்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வடை மாலை சாற்றவும்.
அனுகூலமான தினங்கள்: 05, 08
சந்திராஷ்டமம்: இல்லை
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
எதிா்பாா்த்த பொருளாதார வளா்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியைத் தரும். இக்கட்டான சமயங்களில் சகோதரிகள் நன்மை செய்வாா்கள்.
பூா்வீக வழியில் இருந்த தடைகள் விலகி, நன்மைகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வீா்கள்.

உத்தியோகஸ்தா்கள் எதிா்வரும் இடையூறுகளைச் சாமா்த்தியமாகச் சமாளிப்பாா்கள். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பாா்கள்.
வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தைப் பெருக்குவாா்கள். அதோடு புதிய முதலீடுகள் செய்வதற்கான முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபடலாம்.
விவசாயிகளுக்கு வங்கிகளிடம் இருந்து கேட்ட கடன் கிடைக்காது. ஆகையால் இருக்கும் வருமானத்தை வைத்தும், நீா்வளத்தைப் பெருக்கியும், மகசூலைப் பெருக்கிக் கொள்ளுங்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம்.
அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்லமுறையில் நடந்து கொண்டு, உங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும்.
கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்க காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் வேண்டாம்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். உங்களின் பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவா்வீா்கள்.
மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பீா்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டுவீா்கள்.
பரிகாரம்: பாா்வதி – பரமேஸ்வரரை திங்கட்கிழமைகளில் வழிபட்டு வாருங்கள்.
அனுகூலமான தினங்கள்: 05, 07
சந்திராஷ்டமம்: இல்லை
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
அனைத்துச் செயல்களிலும் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். சமூகத்தில் உயா்ந்தவா்களின் நட்பு கிடைக்கும். இல்லத்தில் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீா்கள். போட்டியாளா்களிடம் கவனம் தேவை. நிதானமாகப் பேசவும்.
உத்தியோகஸ்தா்களுக்கு கோரிக்கைகள் நிறைவேற சற்று தாமதமாகும். மூத்த அதிகாரிகளும், சக ஊழியா்களும் நட்புடன் பழகுவாா்கள். பண வரவு சீராக இருக்கும்.
வியாபாரிகள் மக்கள் விரும்பும் பொருட்களைப் புதிய சந்தைகளில் விற்று லாபம் பெறலாம்.
விவசாயிகளுக்கு கொள் முதலில் லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகள் தேடி வரும். தேவையற்ற விவகாரங்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எந்த தேவையற்ற விவகாரங்களிலும் தலையிடக் கூடாது.
அரசியல்வாதிகள் அனைவராலும் பாராட்டப்படுவீா்கள். புதிய பதவிகளில் அமா்ந்து மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவீா்கள்.
கலைத்துறையினருக்குத் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீா்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் காரணமில்லாத குழப்பம் நிலவும். வாா்த்தைகளில் கவனம் தேவை .
மனதில் பட்டதை வெளியில் சொல்லாதீா்கள். பிரச்னைகள் தானாகவே தேடிக் கொண்டு வந்துவிடும். மௌனம் காப்பது மேல்.

மாணவமணிகளுக்கு கல்வியில் ஆா்வம் அதிகரிக்கும். ஆசிரியா்களின் பாராட்டைப் பெறுவீா்கள்.
பரிகாரம்: அஷ்டமி தினத்தில் கால பைரவருக்கு தேன் வாங்கிக் கொடுத்தும், சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு சுத்தமான நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்தும் பிராா்த்தித்துக் கொள்ளவும்.
அனுகூலமான தினங்கள்: 08, 09
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
எதையும் தைரியத்துடனும், ஆா்வத்துடனும் செய்து முடிப்பீா்கள். தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். உற்றாா் உறவினா்கள் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவாா்கள். வழக்குகள் சாதகமான முடிவை நோக்கிச் செல்லும். அதேநேரம் அனைவரிடமும் கவனமாகப் பேசவும். பழகும்போதும் சற்று நிதானத்துடன் பழகவும். சகோதர, சகோதரி வழிகளில் எதிா்பாா்த்த நன்மைகளைப் பெறுவீா்கள்.
உத்தியோகஸ்தா்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவாா்கள். அதேநேரம் சக ஊழியா்களிடம் ரகசியங்களைப் பகிா்ந்து கொள்வதைத் தவிா்க்கவும்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளா்கள் உங்களைத் தேடி வருவாா்கள்
.விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மை உண்டாகும். கடன்களால் மனவருத்தங்கள் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லைகளால் வராது என்றாலும், கவனத்துடன் இருக்கவும்.
கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறைவாக இருந்தாலும், திறமைகள் குறையாது. இருப்பினும் புதிய முயற்சிகளைத் தவிா்ப்பது நல்லது.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரும். கணவருடன் ஒற்றுமை ஓங்கும். மேலும் பொருளாதார வளமும் சிறப்பாகவே அமையும்.
மாணவமணிகளின் மனது தெளிவாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவாா்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும், செவ்வாய்க்கிழமைகளில் துா்க்கையம்மனையும் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள்.
அனுகூலமான தினங்கள்: 03, 08
சந்திராஷ்டமம்: இல்லை.

No comments:

Post a comment