21-ந் தேதி வரை மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

21-ந் தேதி வரை மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர்


வருகிற 21-ந் தேதி வரை மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார். புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி. எம்.எஸ். உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. தற்போது முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கு கட்ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு சென்டாக் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மருத்துவ மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 2-ம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்ந்த பிறகு காலியிடங்கள் தெரிவிக்கப்படும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இறுதிக்கட்ட கலந்தாய்வில் தரவரிசைப்படி பங்கேற்க அனுமதிக்கபடுவர். மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment