2020 ஆண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

2020 ஆண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ
புது தில்லி: நாட்டில் பொறியியல் கல்லூரிகள் உள்பட சுமார் 180 தொழிற்கல்வி நிலையங்கள் 2020 – 21ஆம் கல்வியாண்டில் மூடப்படுவதாக அனைத்திந்திய தொழிற்கல்வி வாரியம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 179 கல்விநிலையங்களில் 134 கல்வி நிலையங்கள் தொடர்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான மாணவர் சேர்க்கையை பெறாததால், இந்த கல்வியாண்டில் நீட்டிப்புக் கோரி விண்ணப்பிக்கவே இல்லை.
மேலும் 44 கல்வி நிலையங்கள், உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால், உரிமம் மறுக்கப்பட்டுள்ளது.
2019 – 20ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 92 தொழிற்கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, இதுவே 2018 – 19ல் 89, 2017 – 18ல் 134 ஆகவும், 2016-17ம் ஆண்டில் 163 கல்வி நிலையங்களும், 2015-16 ஆம் ஆண்டில் 126ம், 2014-15ல், 77 கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.
தற்போது உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்காத கல்விநிலையங்கள், முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தமாட்டார்கள். ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment