பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்


தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  12-ம் வகுப்பு தேர்வு முடிவை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திய பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment