அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம் - அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

08/07/2020

அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம் - அமைச்சர்

அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும்
என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13-ந்தேதி மூலம் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும். பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.
12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கு இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459