அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை


சென்னை: தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை முழுமுடக்கம் கடைபிடிக்க உள்ளதையொட்டி தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆம்புலன்ஸ், பால், அவசர மருத்துவ சிகிச்சை வாகனங்களுக்கு மட்டும் நாளை பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும். தமிழக அரசின் ஆணையை ஏற்று பெட்ரோல், டீசல் விற்பனை 24 மணி நேரம் நிறுத்தம் செய்யப்படுவதாக சங்கம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment