ஜூலை மாத ராசி பலன்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஜூலை மாத ராசி பலன்கள்


சென்னை: ஜூலை மாதம் ஏழாவது மாதம். வாழ்க்கை பலருக்கும் பயத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. சிலருக்கு ஆரோக்கியம் பற்றிய பயம், சிலருக்கு வேலை பற்றிய பயம், சிலருக்கு பொருளாதார நிலை, வருமானம் பற்றிய பயம், சிலருக்கு குடும்ப சூழ்நிலைகளை நினைத்து பயமாக இருக்கிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை. என்னதான் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாமல் இருந்தாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் பயமில்லாமல் சமாளித்து விடலாம். இப்போது உள்ள நோய் பரவல் கால கட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரை ஆறு ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்
.ஜூலை மாதம் சூரியன் மிதுனம் ராசியில் பாதி நாட்களும், கடகம் ராசியில் 15 நாட்களும் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் இருந்த கிரகங்களின் கூட்டணி பிரிகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனம் ராசியில் புதன், ராகு, தனுசு ராசியில் கேது, குரு, மகரம் ராசியில் சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியனைத்தவிர பெரிய அளவில் கிரகங்கள் இடமாற்றம் இல்லை. இப்போது உள்ள கால கட்டத்தில் ரொம்ப சந்தோஷமாக இருப்பது மாணவர்கள் மட்டும்தான் விடுமுறை காலத்தை ரொம்பவே உற்சாகமாக கொண்டாடினாலும் மேல்நிலைக்கல்வி பற்றிய திட்டமிடுதல் அவசியம் என்பதால் கொஞ்சம் நேரம் விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு படிக்கவும் நேரம் செலவிடுங்கள். இல்லாவிட்டால் பள்ளிக்கு செல்லும் போது அதிகமாக தடுமாற வேண்டியிருக்கும். சரி இந்த மாதம் யாருக்கு பண வருமானம் வரும், யாருடைய வேலை நிரந்தரமாக இருக்கும், யாருக்கு பிரச்சினை வரும் எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம். ராகு கேது பெயர்ச்சி 2020: இந்த 2 ராசிக்காரர்களின் கஷ்டங்களும் காணாமல் போகப்போகுதுமேஷம்செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே. உங்களுக்கு ராசி நாதன் செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருப்பதால் சுப விரைய செலவுகள் வரலாம். இடமாற்றம் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தப்பி பிழைத்து சொந்த நாடு திரும்பி விடுங்கள் இது ரொம்ப நல்ல நேரம். சுக்கிரனால் நல்ல வருமானம் வரும். சுக்கிரனால் நன்மை. தேவைக்கு ஏற்ப பணம் வரும். வாழ்க்கைத்துணையின் மூலம் உதவியும் அன்பும் கிடைக்கும். பண வருமானம் வரும். திருமணம் தொடர்பான சுப பேச்சுவார்த்தைகள் நடக்கும். சூரியன், புதன், ராகு மூன்றாம் வீட்டில் கூட்டணி அமைத்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரும் கவனம் தேவை. சூரியன் 16ஆம் தேதி இடம் மாறுவதால் பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பது சிறப்பு. சனி, குரு வக்ரமாக இருப்பதால் வருமானத்தில் சில தடைகள் வந்து கொண்டே இருக்கும். கொரோனா வைரஸ் காலகட்டத்தில் மனம் ஒருவித ஊசலாட்டத்திலேயே இருக்கும். சிலருக்கு வேலையை விட்டு விடலாமா என்று கூட யோசிப்பீங்க எந்த காரணத்திற்காகவும் வேலையை விட்டு விட வேண்டாம் இருக்கிற வேலையை மன நிறைவோடு பண்ணுங்க நிம்மதி கிடைக்கும். மாத பிற்பகுதியில் சுப பேச்சுவார்த்தைகள் பேசலாம். தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க பிரச்சினைகள் தீரும்.ரிஷபம்சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம், இந்த மாதம் நீங்க எதையும் திட்டம் போட்டு காய் நகர்த்துவீங்க. உங்களின் உடல் பலமும் மன தைரியமும் அதிகரிக்கும். நீங்க இந்த மாதம் உங்க வேலையில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வீண் செலவுகள் வருதே என்று கவலைப்படுவீர்கள். மாத பிற்பகுதியில் பண வருமானம் அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். கடந்த பல நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கும். இந்த மாதம் உங்க காதல் வெற்றி பெறும். காதலிப்பவர்கள் உங்க காதலை தைரியமாக சொல்லுங்க சக்சஸ் ஆகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.
வீடு மனை வாங்க நல்ல மாதம் பத்திரபதிவு செய்யலாம். புதிய வேலைக்கு முயற்சி பண்ணாதீங்க இருக்கிற வேலையில் தெளிவாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சாப்பிடுங்க. நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க.மிதுனம்புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, நோய் பரவல் பல திசைகளிலும் பரவி வருவதால் இந்த மாதம் உங்களுக்கு பலவிதமான யோசனைகள் ஓடிக்கொண்டிருக்கும். எதையும் நிதானமாக யோசிங்க. குருவின் பார்வை மிதுனம் ராசியில் விழுவதால் தெளிவாக திட்டமிடுவீர்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து எதையும் யோசிங்க. குடும்ப வாழ்க்கை, வேலை, இடமாற்றம் பற்றி எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காதீங்க. பலருக்கும் நோய் பரவல் உள்ளதால் நீங்களும் ரொம்ப கவலையில இருப்பீங்க. எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க புதிதாக எதையும் முயற்சி பண்ணாதீங்க. இருக்கிற வேலையில ஸ்டிராங்கா இருங்க. உடல் ரீதியான சில பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்களை ஒத்திப்போடுங்க. அஷ்டமத்து சனி இருப்பதால் பணம் விவகாரங்களில் ஜாக்கிரதையாக இருங்க. நீங்க கடன் வாங்கி யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. தான தர்மம் பண்ணுங்க. உங்க பிரச்சினைகள் தீரும். குரு பார்வையால் உங்களுக்கு எந்த நெருக்கடிகள் வந்தாலும் அதை எளிதில் முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.கடகம்சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். மூத்த சகோதரர்கள் மூலம் பண வருமானம் வரும். வீடு வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நிறைய யோகங்கள் நடக்கும் மாதம். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். சுப காரியங்கள் தொடர்பாக சில பயணங்கள் செல்வீர்கள். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள்.
வங்கிக்கடன் முயற்சி செய்வீர்கள் எளிதாக கிடைக்கும். நீண்ட நாட்களாக அடைக்க நினைத்த கடன்கள் அடையும். உங்களுடைய தசாபுத்தி எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப முயற்சி பண்ணி முடிவெடுங்க. திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசுவீங்க. நினைத்தது நிறைவேறும் மாதம். பணவரவு நன்றாகவே இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும். கண்டச்சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.சிம்மம்சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் இந்த மாதம் எடக்கு மடக்காக இருப்பதால் எதையும் யோசித்து முடிவு பண்ணுங்க எதற்கும் தயாராக இருங்க. எதையும் எடுத்தேன் கவிழ்தேன் என்று முடிவெடுக்காதீங்க.இந்த மாதம் ஆரம்பத்தில் சில தடைகள் வந்தாலும் அதை முறியடித்து முன்னேறுவீர்கள். எட்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் அடிக்கடி பிரச்சினைகள் வரலாம். எதையும் நிதானமாக யோசித்து முடிவெடுங்க. வேலையில் திடீர் மாற்றங்கள் வரும். பொருளாதாரம் அற்புதமாக இருந்தாலும் திடீர் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். உங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் எதிர்ப்புகளை எளிதில் முறியடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் அவ்வப்போது வந்தாலும் ஈசியாக சமாளிப்பீர்கள். தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க உங்க துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் துவம்சம் பண்ணலாம்.கன்னிபுதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மனதாலும் உடலாலும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
உங்க வேலை தொழிலில் திடீர் பிரச்சினைகள் மாத முற்பகுதியில் வரலாம். அதே நேரத்தில் மாத பிற்பகுதியில் உங்களுக்கு புதிய வேலைகள் கிடைப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வருமானம் வரும். பிள்ளைகளின் படிப்பிற்கு சுப செலவுகள் செய்வீர்கள். பேச்சில் கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களும் கோபங்களும் வரலாம் கவனமாக இருங்க விட்டுக்கொடுத்து போங்க பிரச்சினைகள் தீரும். உங்க குடும்ப விசயத்தில மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். வேலையிலும் பண விவாகாரங்களிலும் விழிப்புணர்வோட இருங்க. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாலினத்தவரிடம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்க.

No comments:

Post a comment