கொரோனா உயிரிழப்புகளை குறைக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்து’: லண்டன் ஆராய்ச்சியாளர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கொரோனா உயிரிழப்புகளை குறைக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்து’: லண்டன் ஆராய்ச்சியாளர்

 

மூச்சுப் பிரச்னை போன்ற நோய்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்து டெக்ஸாமெதாசோனின் கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை உயிர்பிழைக்க வைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.
 உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்க்கு இதுவரை உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க பல நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், லண்டனில் உள்ள RECOVERY என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனையில் ஏற்கெனவே மூச்சு பிரச்னை சம்பந்தமான நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து பல கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்த ஆய்வில் உள்ள ஆக்ஸ்போர்டு உள்ள மார்ட்டின் லாண்ட்ரே, “கொரோனா நோயாளிகள் வென்டிலேட்டர்களில் அல்லது ஆக்ஸிஜனில் சிகிச்சையில் உள்ள போது டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் உயிர்களை அது காப்பாற்றியுள்ளது. மேலும் மிகக் குறைந்த செலவில் இந்த மருந்தை செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.
இவர் இந்தக் கொரோனா நோய்த் தொடர்பான ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆவார்.

 முன்னணி ஆய்வாளரான பீட்டர் ஹார்பி, டெக்ஸாமெதாசோன் மருந்து வீக்கத்தைக் குறைப்பதற்காகவும் மற்ற நோய்களுக்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒருவகையான பொதுவான ஸ்டீராய்டுதான். இந்த மருந்து கொரோனா இறப்பைக் கணிசமாகக் குறைக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்கு "ஒரு பெரிய திருப்புமுனை" என அவர் கூறினார்.
 தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு என்று அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் இல்லை. இதனால் இந்த மருத்தின் தேவை மிகவும் பயன் உள்ளதாக மாறியுள்ளது.
 

No comments:

Post a comment