சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அமைச்சர் பதில்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அமைச்சர் பதில்!


சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயக்குமார் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் சென்னையில் அதிகளவில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுதான்.
தமிழகம் முழுவதும் 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் உதயகுமாரிடம் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுமா என்று கேட்கப்பட்டது. இது சம்மந்தமாக அவர் அளித்த பதிலில் \'கிட்டத்தட்ட 78 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் ஐந்தாவது முறையாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்\' எனக் கூறினார். இதனால் மீண்டும் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

No comments:

Post a comment