அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது : தமிழக அரசு உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




15/06/2020

அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது : தமிழக அரசு உத்தரவு


சென்னை,
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்ததில் இருந்து சில தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறத் துவங்கின. இதனையடுத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டார் சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் பழனிசாமியும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
இருப்பினும் தமிழகம் முழுவதும் சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் கிடைத்து.
இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459