தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும்


ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இம் மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என மாநிலஅரசு தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஏப்14 வரை முதல் கட்ட ஊரடங்கு ஏப்.,14-மே – வரையில் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3- மே-17 வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு,மே18-31 வரையில் 4-ம் கட்ட ஊரடங்கும்
, மே 31 முதல் ஜூன் 30 வரையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகின்றன.
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கு வர வேண்டிய வரி வருமானங்கள் குறைந்தன. இதனையடுத்து பல மாநில அரசுகள் செலவுகளை குறைக்க முடிவு செய்தன. அதன்படி தெலங்கானா மாநில அரசு தன்னுடைய துறை ஊழியர்களிடம் 75சதவீதம் , பொதுதுறை ஊழியர்களிடம் 50 சதவீதம் , ஓய்வூதியர்களிடம் 25 சதவீதம், உள்ளிட்டோரிடம் ஊதியகுறைப்பை செய்திருந்தன. அரசின் அடுத்த உத்தரவு வரும் வரையில் இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த மார்ச், ஏப்., மே ஆகிய மூன்று மாதங்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே ஊதிய குறைப்பை சட்டப்பூர்வமாக்க மாநில அரசு முனைப்பு காட்டியது.
மாநில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மாநில ஐகோர்ட் தீர்ப்பின் படி நடப்பதாக மாநில அரசு கூறிஇருந்தது.
இந்நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் ஊதியத்தை முழுமையாக வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ஹரீஷ் ராவ் கூறுகையில் அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் எனவும், நிறுத்தி வைக்கப்பட்ட ஜிபிஎப் கணக்குகளில் செலுத்தப்பட வேண்டிய மூன்று மாத நிலுவை தொகையும் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

No comments:

Post a comment