ஜீவன் பிரமான்’ - ஓய்வூதியர்களுக்காக பிஎப் நிறுவனம் நடவடிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




12/06/2020

ஜீவன் பிரமான்’ - ஓய்வூதியர்களுக்காக பிஎப் நிறுவனம் நடவடிக்கை


ஓய்வூதியர்களுக்கு ‘ஜீவன் பிரமான்’ பெற பொதுச் சேவை மைய வலைப்பின்னலைப் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஒய்வூதியர்களின் வீடுகளுக்கு அருகிலேயே சேவைகளைக் கொண்டு வரும் தேவையை, அதுவும் இந்த கொவிட்-19 பெருந்தொற்றின் சவாலான சமயங்களில், அங்கீகரிக்கும் விதமாக, டிஜிட்டல் (உயிருடன் இருப்பதை உறுதி செய்யும்) வசதியை வழங்க பொதுச்சேவை மையங்களுடன் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சிறப்பான முறையில் கூட்டு சேர்ந்துள்ளது
ve="true"> . 3.65 லட்சத்துக்கும் அதிகமான பொதுச்சேவை மையங்களின் கடைக்கோடி வரை சென்றடையும் வலைப்பின்னலைப் பயன்படுத்திக் கொண்டு, தனது 65 லட்சம் ஓய்வூதியர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே டிஜிட்டல் ஜீவன் பிரமானை சமர்ப்பிக்கும் வசதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அளிக்கிறது. தொடர்ந்து ஓய்வூதியத்தைப் பெற, ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்கள் ஜீவன் பிரமான்/வாழ்வு சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்
ve="true"> . பொதுச்சேவை மையங்களைத் தவிர, 135 மண்ட அலுவலகங்களிலும், 117 மாவட்ட அலுவலகங்களிலும் மற்றும் ஓய்வூதியத்தை வழங்கும் வங்கிகளிலும் கூட ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்கள் ஜீவன் பிரமானை சமர்ப்பிக்கலாம். பல-முகமை முறையைப் பின்பற்றி, சேவை வழங்கும் மையத்தைத் தங்கள் வசதிக்கேற்பத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பங்களையும், வாய்ப்புகளையும் ஓய்வூதியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்குகிறது.
தங்கள் வசதிக்கேற்ப வருடத்தின் எந்த நாளிலும் டிஜிட்டல் ஜீவன் பிரமானை ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஒய்வூதியர்கள் சமர்ப்பிக்கும் முக்கியக் கொள்கை மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் சமர்ப்பித்த நாளில் இருந்து ஒரு வருடம் வரை வாழ்வு சான்றிதழ் செல்லுபடியாகும். ஜீவன் பிரமானை நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கும் முறை முன்னர் அமலில் இருந்தது
ve="true"> . ஓய்வூதியர்களுக்கு இது கடினமாக இருந்ததோடு மட்டுமில்லாமல், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதைப் பற்றிய நிறையக் குறைகளை உண்டாகியது.
மேலும், வாழ்வு சான்றிதழை ஒரு வேளை தாமதமாக சமர்ப்பித்தால், அது நவம்பர் வரையிலான சில மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையில் இருந்தது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஒய்வூதியர்களுக்கு சிக்கலில்லாத சமூகப் பாதுகாப்பை அளிக்கும் வகையில் இந்த ஓய்வூதியர் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459