பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு வருமானம் சான்றிதழ் வழங்க வேண்டாம் - தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

14/06/2020

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு வருமானம் சான்றிதழ் வழங்க வேண்டாம் - தமிழக அரசு

தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் பணியில் 10 சதவீதம்இடஒதுக்கீடு அளிக்கும் வகையில்மத்திய அரசால் கடந்த ஆண்டு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக தமிழகத்திலும் அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குடும்ப வருமானம், சொத்து சான்றுகளை அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வட்டாட்சியர்கள் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இந்த சான்றிதழ்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர்கள், மின் ஆளுமை முகமை ஆணையருக்கு வருவாய் நிர்வாகஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘பொருளாதாரத்தில் நலிந்தபிரிவினர் தொடர்பாக, அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் சுற்றறிக்கைகள், தமிழக அரசின் ஜூன் 4-ம் தேதிஅறிவுறுத்தல்கள் அடிப்படையில் திரும்ப பெறப்படுகின்றன.
எனவே, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு வருமானம், சொத்து சான்றிதழ்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். இதுகுறித்து வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459