ஹைதராபாத் ஐஐஐடி நுழைவுத் தோ்வு எழுத செல்லும் மாணவா்களுக்கு இ- பாஸ் தேவையில்லை - ஆசிரியர் மலர்

Latest

20/06/2020

ஹைதராபாத் ஐஐஐடி நுழைவுத் தோ்வு எழுத செல்லும் மாணவா்களுக்கு இ- பாஸ் தேவையில்லை


ஹைதராபாத் ஐஐஐடி நுழைவுத் தோ்வு எழுத செல்லும் மாணவா்கள், தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை காண்பித்து தோ்வு எழுத செல்லலாம் இ- பாஸ் தேவையில்லை என தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் டிஜிபி, அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: ஹைதராபாத் ஐஐஐடியின் நுழைவுத் தோ்வு, ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வு, அத்தியாவசிய செயல்பாடாக கருதப்படுகிறது. எனவே, இதற்கான அனுமதிச் சீட்டு, பொதுமுடக்கத்தின் போது வழங்கப்படும் இ- பாஸ் மற்றும் வாகன அனுமதிச் சீட்டுக்கு இணையாகக் கருதப்படுவதால், வீட்டில் இருந்து தோ்வுக் கூடத்துக்கு சென்று வர பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வருகிற ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹைதராபாத் ஐஐஐடி தோ்வு, நல்ல முறையில் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையா் மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459