மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் கட்டாயம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் கட்டாயம்

சென்னை : நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலங்களுக்குள் பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ – பாஸ் அவசியம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டம் தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது:
*கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
*கொரோனாவை தடுப்பது தொடர்பாக பிரதமருடன் 6 முறையும், கலெக்டர்களுடன் 7 முறையும் ஆலோசனை நடத்தப்பட்டது.
*மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
*சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன
.
*சென்னையில் 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
*சென்னையில் கொரோனாவை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏழை மக்களுக்கு ரூ.1,000 நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*சென்னை மக்கள், தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
*நோய் அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும். இருக்கும் இடத்திற்கே வந்து நடமாடும் வாகனங்கள் மூலம் சோதனை செய்யப்படுகிறது.
*நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
*ஒரே மண்டலத்தில் இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
*நாளை முதல் மாவட்டத்திற்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும்
.
*மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இனிமேல் இ-பாஸ் பெற வேண்டும்.
*மாவட்டங்கள் இடையே கார் டூவிலர் தனியார் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது
*அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான அளவு டாக்டர்கள், நர்சுகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
*மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு பகுதியில் அரிசி ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஆயிரம் ரொக்கம் நிவாரணமாக வழங்கப்படும்.
*காய்கறி. இறைச்சி கடைகளுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும்
*கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
* கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a comment