சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அற்புத கசாயம் - ஆசிரியர் மலர்

Latest

14/06/2020

சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அற்புத கசாயம்



சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த அற்புத கசாயத்தை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
கடல் அழிஞ்சில்.   –  15  கிராம்
பருத்தி விதை.      –   15 கிராம்
செய்முறை
முதலில் கடல் அழிஞ்சில் மற்றும் பருத்தி விதை ஆகியவற்றை எடுத்து சுத்தப் படுத்திக் கொள்ளவும். கடல் அழிஞ்சில் மற்றும் பருத்தி விதை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இடித்துக் கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி  அதில்  இடித்து வைத்துள்ளவற்றைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க வைத்து 400 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி  வடிகட்டி  குடிக்கவும்.
பயன்கள்
இந்தக் கசாயம்  சர்க்கரை நோய் மற்றும் சர்க்கரை நோயினால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர் வெளியேறுதல் போன்ற குறைபாடுகளை நீக்க  உதவும் அரு மருந்தாகும். இந்தக் கசாயத்தை தயார் செய்து  காலை மற்றும் மாலை வேளையில் தலா 200 மி.லி வீதம் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.
– கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459