விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி


பெங்களூரு, விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
வணிக ரீதியில் ராக்கெட் உருவாக்குதல், செயற்கைகோள்களை நிறுவுதல், வணிக ரீதியில் செயற்கைகோள்களை ஏவும் சேவையை வழங்க அனுமதி அளித்தல் போன்றவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இஸ்ரோவின் கோள்களை ஆராய்ச்சி செய்யும் விண்கல திட்டத்திலும் தனியார் துறை பங்கேற்க முடியும். வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் மூலம் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தனியார் துறையை அனுமதிப்பதால், இஸ்ரோவின் பணிகள் குறையாது.
விண்வெளி நவீன ஆராய்ச்சி, கோள்கள் ஆய்வு, மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டம் போன்ற பணிகளில் இஸ்ரோ ஈடுபடும். விண்வெளி துறையின் கீழ் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் ஆணைய மையம் (இன்ஸ்பேஸ்) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம், தனியார் துறைகளின் விண்வெளி நடவடிக்கைகளை அனுமதிப்பது, முறைப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கொண்டு சுயமாக முடிவு எடுக்கும். இந்திய விண்வெளி ஆய்வுத்துறை மட்டுமின்றி, இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக விண்வெளி பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியமான பங்காற்ற உதவும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய சீர்திருத்தம் ஆகும்.
விண்வெளியில் தொழில்நுட்பம், சட்ட பாதுகப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல், நோக்கங்களை கண்காணித்தலுக்காக தனி அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் தனியார் அமைப்புகள் சொந்தமாக முடிவுகளை எடுக்கலாம். விண்வெளி வாரியத்தில் தொழில்துறை, கல்வியாளர்கள், அரசு பிரதிநிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டு இந்த முடிவு செயல்பாட்டுக்கு வர இன்னும் 6 மாதங்கள் ஆகும். இந்த இடைபட்ட காலத்தில் தனியார் நிறுவனங்கள், விண்வெளி துறையிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். தனியார் நிறுவனங்கள் நேரடியாக விண்வெளி துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியும்
. இன்ஸ்பேஸ் அமைப்பு அதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு அந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும். அந்த அமைப்பு முடிவு எடுத்துவிட்டால், அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதாவது இஸ்ரோ அல்லது தனியார் அமைப்புகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் பொதுத்துறை அமைப்பான புதிய விண்வெளி இந்திய நிறுவனம் (என்.எஸ்.ஐ.எல்.), அரசு மேற்கொண்டுள்ள பெரும் முயற்சியில் முக்கிய பங்காற்றி உள்ளது. இந்த நிறுவனம் இஸ்ரோ ஆராய்ச்சி திட்டங்களை மறுசீரமைத்து, மாற்றங்களை ஏற்படுத்தி மிகவும் பயன் தரக்கூடிய அளவில் விண்வெளி சொத்துகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும்.
இவ்வாறு சிவன் கூறினார்.

No comments:

Post a comment